Friday 14 October 2011

ஆசைக்கவிதைகள் - 2

                     மாய வயிற்றுவலி 

பெண்:  வண்ணத் தலைப்பாகட்டி
                       வரப்பால போறமச்சான்
            மாய வயிற்றுவலி
                      மருந்தொன்று சொல்லிடுங்கோ
ஆண்:  எண்ணெய் ஒருகளஞ்சு
                     எருக்கலம்பால் முக்களஞ்சு
           கள்ளிப்பால் காக்களஞ்சு
                      கலந்துகுடி மச்சியரே
பெண்:  எண்ணெய் எரிக்குமெடா
                      எருக்கலம்பால் தீயுமெடா
             கள்ளிப்பால் காந்துமெடா
                       கண்ணவிவா உன்மருந்து.
                                         (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

No comments:

Post a Comment