Tuesday 29 August 2023

போர்க்கோலம் வந்தால்


கார்காலம் தன்னில் காரிருள் சூழும்
           கானலும் மெல்ல கவிந்தடங்கும்

நீர்கோல மேகம் நித்திலம் சிந்தும்

  நீள்நிலம் எங்கும் நீர்வழிந்தோடும்

ஏர்காலம் வந்து ஏழ்மையைப் போக்கும்

  ஏழையர் நெஞ்சம் களித்துவக்கும்

போர்க்கோலம் வந்தால் பகைமையை கூட்டும்

  பொழுதெலாம் மானுடம் பொன்றியேபோகும்

இனிதே,

தமிழரசி.



சொல்விளக்கம்:

கார்காலம் - மழைக்காலம்

காரிருள் - கரிய இருள்

கானல் - வெப்பம்

கவிந்தடங்கல் - சேர்ந்து /குவிந்து அடங்கும்

நீர்கோல - நீர்கொண்ட

நித்திலம் - முத்துபோன்ற மழைத்துளி

சிந்தும் - வீழும்

நீள்நிலம் - நிலமெங்கும்

ஏர்காலம் - உழவு காலம்

ஏழ்மை - பொருளில்லாத் தன்மை

ஏழையர் - பொருள் அற்றோர்

களித்துவக்கும் - மகிழ்ந்து விரும்புதல்

மானுடம் - மனிதர்

பொன்றியேபோக்கும் - அழிந்துபோகும்