Wednesday, 14 October 2026

முறுவல்காட்டி முப்பொருள் முறைமை செப்படா

சின்னத்தனம் செய்து செத்து மடியவோ
            சிவபாலா என்னைப் படைத் தீங்கிட்டாய்
கன்னல்தமிழ் பயில் காலை வேளையிலே
            காதில் காச்சல்மொழி கேட்ட தேனையா
முன்னம்செய் பிழை முகிழ்ந்து எரிவதாலா
            முறையற்ற சொல் மனதை எரிப்பதேனோ
முன்னம்வந்து சிந்தை சேர்ந் திருப்போனே
            முறுவல்காட்டி முப்பொருள் முறைமை செப்படா
இனிதே,
தமிழரசி.