Friday 28 July 2023

திருப்பாதத்தே தோய அருள்வாயோ!


தாயாகிச் சேயாகி இத்
          தாரணியிற் பிறந்து
மாயா மடிதனில் யான்
          மாய்ந்து போவேனோ!
ஓயா இப்பிறப்பெல்லாம்
          ஓய்வது எப்போதோ!
தூய நின் திருப்பாதத்தே
          தோய அருள்வாயோ!

இனிதே,
தமிழரசி.