கைகழுவிப் போன மச்சான்
ஆண்: முறுக்கிவிட்ட மீசையுடன்
மல்லுவேட்டியை நான்
இறுக்கி இறுக்கி கட்டினாலும் ஒரு
சிறுக்கி வரப்போவதில்லை
பெண்: மல்லுவேட்டி கட்டி கிட்டு
மடுவுக்கு போறவரே
நில்லும் கொஞ்சம் நானும் வாரன்
நிம்மதியாய் போய் வரலாம்
ஆண்: கன்னங் கறுத்த மச்சி
கல்யாணம் கட்டி கிட்டு
இன்னும் என்நினைவால்
ஏங்கித் தவிக்குது பார்
பெண்: கல்யாணம் கட்டமுன்னம்
கண்டிப்பாய் வாரனென்று
கைகழுவிப் போன மச்சான்
கதையளப்பது இப்படியா?
(பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
No comments:
Post a Comment