கொவ்வைக்காய் பிரட்டல்
- நீரா -
தேவையான பொருட்கள்:
கொவ்வைக்காய் - 350 கிராம்
மிளகாய்த்தூள் - ¼ தே.கரண்டி
மஞ்சள்தூள் - ¼ தே.கரண்டி
சிறிதாக வெட்டிய வெங்காயம் - ¼ கப்
சிறிதாக வெட்டிய பச்சைமிளகாய் - 3
கடுகு - ½ தே.கரண்டி
எண்ணெய் - 1 மே.கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு
புளி - சிறிதளவு
வறுக்கத் தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 1 மே. கரண்டி
தேங்காய்ப்பூ - 2 தே.கரண்டி
சின்னச்சீரகம் - ½ தே.கரண்டி
மிளகு - ½ தே.கரண்டி
செத்தல் மிளகாய் - 2
செய்முறை:
1. வறுக்கத்தேவையான பொருட்களை வறுத்து, சிறிது புளியும் சேர்த்து நறுவல் துருவலாக அரைத்துக் கொள்க.
2. கொவ்வைக்காயை கழுவி ஒவ்வொன்றையும் நீள் பக்கமாக நான்கு துண்டுகளாக வெட்டவும்.
3. வெட்டிய கொவ்வைக்காய்த் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அவித்து எடுக்கவும்.
4. வாயகன்ற இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு போட்டு, கடுகு வெடிக்கும் போது, வெட்டிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை இட்டு பொன்னிறமாக தாளிக்கவும்.
5. அதனுள் அரைத்து வைத்திருக்கும் பொடியைப் போட்டு கலந்து வேகவிடவும்.
6. அவித்து வைத்திருக்கும் கொவ்வைக்காய்களை அதற்குள் இட்டு கிளறி, மெல்லிய நெருப்பில் தண்ணீர் சுண்டும்வரை வேகவிட்டு இறக்கவும்.
No comments:
Post a Comment