வெட்ட வெளிதனில் வேகும் நல் வெய்யிலிலே
தட்டத் தனியாகத் தானே உலை வைத்து
கொட்டு மழையில் கிடந்த விறகு எடுத்து
பட்டுக் கரத்தால் பற்றவைக்கப் பார்த்தே
விட்டு விட்டூதி விழியைப் புகை கௌவயிலே
சொட்டுச் சொட்டாய் கண்ணீர் சிந்திய போதும்
எட்டியிருந் தேங்கும் எந்தன் பசி தீர்க்க
அட்டிச் சமைத்தான் அண்ணன் அன்புச் சோறே!
இனிதே,
தமிழரசி
சொல்விளக்கம்:
கௌவுதல் - பற்றுதல்
அட்டி - சேர்த்து
No comments:
Post a Comment