Tuesday, 20 August 2013

பரமன்பாதம் நிதம்பாடு!

        
            மறையின் பாடல் தனைக் கேட்டு
                  மன மகிழ்ந்தே இசையூட்டி
            இறைவன் என்றொரு பொருள் கண்டு
                  இதய வீணை தனைமீட்டி
            உறைவன் என்றன் உணர் வோடு
                  உலக அரங்க மேடையிட்டு
            பறையோ டாடல் பயின் றாடு
                  பரமன் பாதம் நிதம்பாடு!
            இனிதே,
            தமிழரசி.

No comments:

Post a Comment