பலாக்கொட்டை பிரட்டல்
- நீரா -
தேவையான பொருட்கள்:
பலாக்கொட்டை - 500 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
கறுவா பட்டை - 1”
ஏலம் - 2
கராம்பு - 2
கடுகு - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
மிளகாய்த்தூள் - 2 தே.கரண்டி
மஞ்சள் தூள் - ¼ தே.கரண்டி
மிளகுதூள் - ½ தே.கரண்டி
எண்ணெய் - 3 தே.கரண்டி
தேங்காய்ப்பால் -½ கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. பலாக்கொட்டைகளைத் தட்டி வெளித்தோலை உரித்துக்கொள்க.
2. தோல் உரித்த பலாக்கொட்டைகளை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும்.
3. ஊறிய பலாக்கொட்டைகளின் உட்தோலை கத்தியால் சுரண்டி நீக்கி, கழுவி தண்ணீர் விட்டு அவித்து, வெந்ததும் தண்ணீர் இல்லாது வடித்தெடுக்கவும்.
4. வெங்காயம், பச்சைமிளகாய் இரண்டையும் சிறிதாக வெட்டிக் கொள்க.
5. வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, கறுவா, ஏலம் , கராம்பு போட்டு தாளித்து கடுகு வெடித்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை இட்டுத் தாளிக்கவும்.
6. வெங்காயம் பொன்னிறமாக வரும்போது மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய்ப்பால் விட்டு கொதிக்கவிடவும்.
7. தேங்காய்ப்பால் கொதிக்கும் பொழுது அதற்குள் வடித்து வைத்துள்ள பலாக்கொட்டைகளைப் போட்டு கிளறி மூடி மெல்லிய நெருப்பில் வேகவிட்டு, கறிக்கூட்டு பலாக்கொட்டைகளுடன் பிரண்டு வரும்போது இறக்கவும்.
No comments:
Post a Comment