கிளிநொச்சி கந்தவேள் வணக்கப் பாமலர்
- இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன்
அகரத்தின் ஒலிபோல அகிலங் கலந்தநீ
அரியயன் அண்டர் முதல்வன்
அடிபரவ அருள்செய்யும் புனிதநீ யடியவர்க்
கன்புருவ மான பொருளே
இகரத்தின் இனிமையாய் இகபர மிரண்டினும்
இசைந்த மர் பாலனே
இணையிலா அன்பினொடு உருகு மவர்தம்
இதயத்தில் இழை யோடுவாய்
உகரத்தின் வடிவான சிவனுக்கு முபதேசம்
உரைசெய்த குரு நாதனே
ஓங்கார நாதற்கு மொருதம்பி யாகியே
உலகுவல மாக வந்தீர்
மகரத்தின் கொடியுயர மதுரையினை யாண்டழகு
தமிழாய்ந்த இள முருகனே
மங்கலம் பாதினாறு தங்கிவளர் கிளிநொச்சி
மருவு மொரு கந்தவேளே!
No comments:
Post a Comment