இறுமாந்து நிற்கும்
மானுடர் நாம்!
மாயவலை போட்டு
மானுட நேயம்
மாயவில்லை என்று
பேசிப்பேசி தங்கள்
பேச்சாலே உலகை
ஏய்க்கும் அரசியல்
ஏமாளிகளாய் மானுடர்!
கண்ணிருந்ரும் பாராது
காதிருந்தும் கேளாது
மூக்கிருந்தும் முகராது
மெய்யிருந்து முணராது
வாயிருந்தும் பேசாது
வாழ்நாளைப் போக்கி
முதுமையின் எல்லையில்
மூழ்கிடும் போது
சாக்கடை நீரும்
சகதியும் தானா?
தகிக்கிதே நெஞ்சம்
தோம்தரிகிட தோம்!
தாகத்துக்கு நீரும்
தாராத உலகமெடா!
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment