Sunday, 2 June 2013

உழைக்கும் தாய்மை
















கொட்டிக் கிழங்கு சுமந்த கொடிச்சி யவள்போல 
கட்டுக் குலையாது சிற்றிடை வெட்டும் வயதெனினும்
தட்டுத் தடுமாறி தளர்நடை போடும் வயதெனினும்
நட்டு நடுவெயில் கொதிக்கும் மணல் மேலே
பட்டுக் கால் பதித்து நடைபயின்று நாளும் 
சுட்டுக் கால் கொப்பளித்து மரம் ஆயிடினும் 
எட்டி நடைபோட்டு எங்கும் சுற்றித் திரிந்து 
வட்டில் சுமந்து காய்கறி கூவிவிற்று வரும் 
துட்டில் உற்றமனை வாழ உழைக்கும் தாய்மை
கட்டி நிதம்காத்து அன்பாய் வளர்க்கும் சேயை. 
                                                                                 - சிட்டு எழுதும் சீட்டு 63

No comments:

Post a Comment