வாழைக்காய் வதக்கல்
- நீரா -
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் [மொந்தன்] - 4
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 3
கறிவேப்பிலை - கொஞ்சம்
மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு - ½ தேக்கரண்டி
சீரகம் - ½ தேக்கரண்டி
பெருங்காயம் - 1 சிட்டிகை
எண்ணெய் - ¾ மே.கரண்டி
செய்முறை:
1 . வாழைக்காயை தோல் சீவி மெல்லியதாக துண்டுகளாக வெட்டி, சிறிது உப்பு கலந்த நீரில் போடவும்.
2. வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்க.
3. உப்பு நீரில் இருக்கும் வெட்டிய வாழைக்காயை கழுவி, மூன்று நிமிடம் மைக்ரோ அவணில் வேகவைத்து எடுக்கவும்.
4. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, சீரகம் போட்டு, கடுகு வெடித்ததும் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை இட்டு தாளிக்கவும்.
5. வெங்காயம் பொன்னிறமாக வரும்போது மிளகாய்த்தூள், மல்லித்தூள், பெருங்காயம், உப்பு சேர்த்துக் கிளறி, வேகவைத்துள்ள வாழைக்காயைப் போட்டு பிரட்டவும்.
6. தேவையாயின் சிறிது தண்ணீர் தெளித்து வேகவிட்டு வதக்கி, வெந்ததும் இறக்கவும்.
No comments:
Post a Comment