Saturday, 8 June 2013

அடிசில் 57

பலாப்பழ ஜாம்

                                                 - நீரா -





















தேவையான பொருட்கள்:
பலாப்பழச் சுளைகள் [கொட்டை நீக்கியது] - 6 கப்
சீனி - 4 கப்
தண்ணீர் - ¼ கப்
நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை:
1.  பலாப்பழச்சுளைகளை சிறிதாக வெட்டி, தண்ணீர் விட்டு மெல்லிய நெருப்பில் கொஞ்சம் அவித்து ஆறவிடவும்.
2.  ஆறிய பலாப்பழச்சுளைகளை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
3.  ஒரு பாத்திரத்தில் சீனியைப் போட்டு சிறிது சூடாக்கவும். [சீனி உருகக் கூடாது.]
4.  இன்னொரு வாயகன்ற பாத்திரத்தில் அரைத்த பலாபழச்சுளை விழுதை இட்டு, சூடான சீனியையும் சேர்த்து மெல்லிய நெருப்பில் சீனிகரையும் வரை கிளறவும்.
5.  சீனி முழுவதும் கரைந்ததும் நெருப்பைச் சிறிது கூட்டி அடிப்பிடியாது கிளறி வேகவிடவும்.
6.  அதிக குமிழிகள் வந்து பலாப்பழம் வேகும் பொழுது, ஒரு தேக்கரண்டி ஜாமை எடுத்து குளிரூட்டிய சிறிய கிண்ணத்தில் போட்டதும் விரைவாக ஆறி இறுகும். அதை சுட்டுவிரலால் அழுத்திப் பார்க்க சுருக்கம் தோன்றினால் அதற்குள் நெய்யைச் சேர்த்துக் கலந்து இறக்கலாம். அல்லது 105o C வெப்பநிலையில் நெய்யைச் சேர்த்தும் இறக்கலாம்.
7.  இறக்கிய ஜாமை ஈரமற்ற காற்றுப்போகாத போத்தல்களில் போட்டு வைக்கவும்.

குறிப்பு:
1. சீனி நன்கு கரையாவிட்டாலும், சீனி கூடினாலும், அதிக நேரம் வெந்தாலும் ஜாமில் சீனிப் பளிங்குகள் உண்டாகும்.
2. தண்ணீர் தன்மை இருந்தால் ஜாம் விரைவாகப் பூஞ்சணம் பிடிக்கும்.

No comments:

Post a Comment