ஒருநாள் பெய்த மழைநீரில்
ஓங்கி வளர்ந்தேன் இதமாக
மறுநாள் மலர்ந்தே இறுமாந்து
மண்மீதிருந்தேன் காளானாய்
சிறுநாள் போது கழிந்ததுமே
சிதைந்து வீழ்ந்தேன் சிதையாக
சிறுநாள் வாழ்வைப் பெரிதென்றே
செருக்கி நிற்றல் நன்றாமோ!
இனிதே,தமிழரசி.
No comments:
Post a Comment