வீரவேல் தாரைவேல் விண்ணோர்சிறை மீட்டவேல்
காரைவேல் கடம்பவேல் கண்ணிற்கினிய கருணைவேல்
தீரவேல் திளைப்பீரேல் திண்மையெய்தி வாழ்வரேல்
ஓரைவேள் ஓம்புவேல் ஒன்றுங்குறை இல்லையேல்.
சொல் விளக்கம்:
தாரைவேல் - கூர்மையான வேல்
காரைவேல் - குளிர்ச்சியான வேல்
கடம்பவேல் - தீவினை நீக்கும் வேல்
தீரவேல் - வலிமை மிக்க வேல்
திளைப்பீரேல் - விடாது நினைத்தால்
வாழ்வரேல் - வாழ்வாரென்றால்
ஓரைவேள் - எந்நேரமும்
ஓம்புவேல் - போற்றினால்
No comments:
Post a Comment