கறிமிளகாய் சலட்
- நீரா -
தேவையான பொருட்கள்:
கறிமிளகாய் [Capsicum Chillies] - 5
தக்காளிப்பழம் - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
வினாக்கிரி [Vinegar] - 2 மேசைக்கரண்டி
ஒலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி
மிளகுதூள் - ½ தேக்கரண்டி
கடுகு தூள் - 1 தேக்கரண்டி
சீனி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. கறிமிளகாய், தக்களிப்பழம், வெங்காயம், பச்சைமிளகாய் நான்கையும் மிகமெல்லிய துண்டுகளாக வெட்டி ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டுக் கலந்து கொள்ளவும்.
2. இன்னொரு பாத்திரத்தில் வினாகிரி, ஒலிவ் எண்ணெய், மிளகுதூள், கடுகுதூள், சீனி, உப்பு இவற்றை இட்டு நன்றாக அடித்துக் கொள்க.
3. கறிமிளகாய்க் கலவையினுள் அடித்தவினாக்கிரி கரைசலைவிட்டு கலந்து அரைமணி நேரமாவது மூடிவைத்துப் பாவிக்கவும்.
No comments:
Post a Comment