Sunday, 14 July 2013

கதிர்காம வாசனே!

அற்றைநாள் உனை நினைவேனோ
          அந்தகன் கண்படும் போது 
பற்றை மறக்கிலா பரிதவிப்பேனோ
          படுந்துயர் கண்டுமே
சற்றைக் கேனும் இரங்காயோ
          சங்கரன் மகனே!
கற்றைவார் குழலாள் பயந்த
          கதிர்காம வாசனே!

No comments:

Post a Comment