பொங்கும் கடல் அலைகள்
கரை கொஞ்சி மீளயிலே
தங்கும் வெண் மணலில்
சிப்பி இனம் மிளிர்வதை
பிஞ்சுக் கரம் தன்னால்
படம் வரைந்த போதினிலே
எங்கும் சல சலவென
எட்டுக்கால் ஊன்றி இருகால்
தொங்க வட்ட வடிவாக
தண்ணீரில் நடந்து வந்த
சிங்கார நண்டை நானும்
சிலிர்த்து உற்று நோக்கையிலே
பொங்கு மனத்து ஆசையுடன்
புன்னகையை முகத் திருத்தி
மங்காத சித்திரமாய் வரைந்து
வைத்தாள் தாய் அவளே!
- சிட்டு எழுதும் சீட்டு 68
No comments:
Post a Comment