நாற்படை தானோடும்
வாளாடும் அண்ணனவன்
வாளோடு காத்திருக்கான்
ஆண்: வாளோடு விளையாட
வரம்வேண்டி வந்தவன் நான்
தோளோடு விளையாட
தோற்பேனோ பார்த்திடுவாய்!
பெண்: தோற்றாலும் வென்றாலும்
துடிப்பவள் நான் அல்லவா!
தோளோடு விளையாட
வாள் எதற்கு வல்லவரே!
- நாட்டுப்பாடல் (பூநகரி)
- நாட்டுப்பாடல் (பூநகரி)
(பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
No comments:
Post a Comment