Thursday 1 December 2011

மரம் எங்கே? மரம் எங்கே?


பார் பார், மரம் பார்
அங்கு பார், இங்கு பார்
மரம் எங்கே? மரம் எங்கே?
அங்கும் இல்லை, இங்கும் இல்லை
எங்கும் இல்லை, என்ன ஆச்சு?

வெட்டி, வெட்டி, வீழ்த்தி விட்டார்
குருவி குந்த கிளையும் இல்லை
நாம் நிற்க நிழலும் இல்லை
மரமின்றிப் போனதாலே
மரமின்றிப் போனதாலே


பச்சை நிறமும் இல்லை ஆச்சு.
பாரெங்கும் பாழாய் போச்சு.
நாம் வளர்ப்போம் நல்ல மரங்கள்,
பாரெங்கும் பார்த்து, பார்த்து
நாம் வளர்ப்போம் நல்ல மரங்கள்.  
இனிதே,
தமிழரசி.
  
குறிப்பு:
Devonshire Secondary School  ஒன்றின் கலாச்சார விழாவில் தமிழ் மொழியை அறியாத அங்கு படித்த 9ம் 10ம் வகுப்பு மாணவிகள் 40 நிமிட நேரத்தில் மனனம் செய்து பாடுவதற்காக அவர்களுக்கு முன்பு எழுதியது. மரம் வளர்த்தல் தமிழர் பண்பாடு என்பதை அங்கு இருப்பவர்களுக்கு உணர்த்த எழுதியது.

No comments:

Post a Comment