Monday, 14 November 2011

வந்தருள்வாய் வயலூரா!


ஊனடுத்த உடம்பெடுத்து
          உயிர்வைத்த காரணத்தை
நானுணரக் காட்டியவா
          நான்மறைகள் ஓதியவா
தேனடுத்த மலர்ப்பொய்கை
          தென்றலது இசைபாட
வானடுத்த மழைபோல
          வந்தருள்வாய் வயலூரா.
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
ஊனடுத்த - ஊனுடன் சேர்ந்த
தேனடுத்த - தேன் கலந்த
வானடுத்த - மேகமூட்டமாய் வரும்

No comments:

Post a Comment