லெமன் சீஸ் கேக்
- நீரா -
தேவையானவை:
எலுமிச்சம் பழம் - 4 (சாறு)
பிலடெல்பியா சீஸ் - 300 கிராம்
சீனி - 100 கிராம்
முட்டை** - 4
பட்டர் - 75 கிராம்
டபிள் சொக்லேட் சிப் குக்கீஸ் - 200 கிராம்
Springform Cake Tin
செய்முறை:
2- அக்கலவையை கேக்டின்னின் அடியிலும் ஓரத்திலும் அழுத்தி வையுங்கள்.
3- சீசையும் சீனியையும் மிகுதியாக உள்ள பட்டரையும் பஞ்சுபோல் நன்றாக அடித்து தனியே வையுங்கள்.
4- முட்டையை நன்கு அடித்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறும் சேர்த்து அடிக்கவும்.
5- அதனுள் அடித்து வைத்துள்ள சீஸ் கலவையை கொஞ்சம் கொஞ்சமாகக் சேர்த்துக் கலக்கவும்.
6- அக்கலவையை கேக்டின்னுள் இருக்கும் குக்கீஸ் மேல் மெதுவாக இட்டு மட்டமாகப் பரப்பவும்.
7- அதனை 180° C சூடாக்கிய அவணில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும்.
குறிப்பு: மறக்காது 50 நிமிடத்தால் பார்ப்பது நல்லது.
No comments:
Post a Comment