மங்கையராகப் பிறப்பதற்கே - நல்ல
மாதவம் செய்திட வேண்டுமென்று
தங்கத்தமிழில் எழுதிவைத்த - அந்த
தேசிகவிநாயகம் பிள்ளையவர்
பங்கையர் கைநலம் பார்த்தல்லவோ - இந்த
பாரில் அறங்கள் வளருதென்றார்
செங்கல் உடைக்கும் கையதனால் - இந்த
சின்ன சிறுமியின் கையதனால்
மங்கலங்கள் எங்கும் மலர்ந்திடுமோ ! - உயர்
மாநில மீதினில் வாழ்வோரே!
பங்கமெமக்கு இல்லையென்று - உயிர்
பாலித்திருந்திடல் நீதியோ!!
- சிட்டு எழுதும் சீட்டு 74
No comments:
Post a Comment