இரசப்பொடி
- நீரா -
- நீரா -
தேவையான பொருட்கள்:
மல்லி - 250 கி
மிளகு - 100 கி
சீரகம் - 100 கி
மிளகாய் வற்றல் - 50 கி
கறிவேப்பிலை - கொஞ்சம்
துவரம் பருப்பு - 150 கி
செய்முறை:
1. துவரம் பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்க.
2. இளஞ்சூட்டில் மிளகாய் வற்றல், கறிவேற்பிலை இரண்டையும் சாதுவாக வறுத்துக் கொள்க.
3. வறுத்தவற்றுடன் மல்லி, மிளகு, சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து ஈரமில்லாத காற்றுப்போக முடியாத போத்தலில் போட்டு வைத்துப் பாவிக்கவும்.
பின் குறிப்பு:
ஒரு பாத்திரத்தில் தக்காளி அல்லது பழப்புளி சேர்த்த தண்ணீரைச் சூடாக்கி உள்ளி, இரசப்பொடி, உப்பும் போட்டுக் கொதிக்கவைத்து திடீரென இரசம் வைத்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment