ரவைப் பணியாரம்
தேவையான பொருட்கள்:
- நீரா -
தேவையான பொருட்கள்:
வறுத்த ரவை - 1 கப்
கோதுமை மா - 1 கப்
சீனி - 1 கப்
பால் - 1 கப்
தேங்காய்த் துருவல் - ½ கப்
வறுத்த எள் - ½ கப்
ஏலப்பொடி - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
1. ரவை, கோதுமை மா, சீனி மூன்றையும் ஒரு பாத்திரத்தில் இட்டு நன்றாகக் கலந்து கொள்க. [கலப்பதால் கரைக்கும் போது கட்டிகள் ஏற்படாது]
2. அதனுள் பாலைவிட்டு கட்டியில்லாது கரைத்து ஒரு மணிநேரம் ஊறவிடுக.
3. ஊறிய கலவையுள் தேங்காய்த் துருவல், எள், ஏலப்பொடி, உப்பு சேர்த்து இட்டலி மாப்பதத்தில் கரைத்துக் கொள்க. [தேவையெனில் பாலோ, தண்ணீரோ சேர்த்துக் கொள்ளலாம்]
4. அடிப்பக்கம் தடிப்பான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய்விட்டுச் சூடாக்கவும்.
எண்ணெய் கொதித்ததும் மேசைக் கரண்டியால் மாவை எடுத்து எண்ணெய்யில் சிறிது சிறிதாகவிட்டுப் பொரிக்கவும்.
5. கீழ்ப்பக்கம் பொன்னிறமாகப் பொரிந்ததும் புரட்டிவிட்டு, மறுபக்கம் பொரிந்ததும் எடுக்கவும்.
குறிப்பு:
இப்பணியாரம் பொரிக்கும் போது பாத்திரத்தில் ஒட்டிக்கொள்ளும். அது பொரிக்கும் பாத்திரத்தைப் பொறுத்தது. ஆதலால் நொன்ஸ்டிக் பாத்திரத்தைப் பாவிக்கலாம்.
No comments:
Post a Comment