புடலங்காய்ப் பச்சடி
- நீரா -
தேவையான பொருட்கள்:
குறுணலாக வெட்டிய புடலங்காய் - 2 கப்
குறுணலாக வெட்டிய வெங்காயம் - 1
குறுணலாக வெட்டிய பச்சைமிளகாய் - 2
கட்டித்தயிர் - ½ கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ½ மே. கரண்டி
கடலைப் பருப்பு - 1 தே. கரண்டி
கடுகு - ½ தே. கரண்டி
ஒடித்த செத்தல் மிளகாய் - 1
கறிவேப்பிலை - கொஞ்சம்
செய்முறை:
1. புடலங்காயை ஆவியில் அரைப்பதமாக அவித்துக் கொள்க.
2. ஒரு பாத்திரத்தில் வெட்டிய வெங்காயம், வெட்டிய பச்சை மிளகாய் இட்டு அத்துடன் தயிர், உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்க.
3. அதற்குள் அவித்த புடலங்காயைப் போட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும்.
4. ஒரு சிறிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டுச் சூடாக்கவும்.
5. எண்ணெய் சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, செத்தல் மிளகாய், கறிவேப்பிலை இவற்றை முறையே ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளிக்கவும்
6. புடலங்காய்க் கலவையுள் தாளிதத்தைக் கொட்டிக் கலந்து பரிமாறவும்.
No comments:
Post a Comment