Thursday, 18 April 2013

அடிசில் 52

சுட்ட இஞ்சி அரையல்

                                                   - நீரா -


























தேவையான பொருட்கள்:
இஞ்சித்துண்டு  -  2” நீளமானது
தேங்காய்த் துருவல்  -  3 மேசைக்கரண்டி
செத்தல் மிளகாய்  -  3
சின்னவெங்காயம் - 5
பழப்புளி - சிறிதளவு
கறிவேப்பிலை  -  கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
1. இஞ்சியைச் சுட்டு தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்க.
2. சின்னவெங்காயத்தை உரித்துக் கொள்க.
3. செத்தல் மிளகாய், தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை மூன்றையும் சிறிது வறுத்து எடுக்கவும்.
4. இவற்றுடன் பழப்புளியும் உப்பும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

No comments:

Post a Comment