Thursday 4 April 2013

காணா மருமமேதையா!


                            பல்லவி 
மருமமேதையா மாதவன் மருகா - உன்
மலரடி காணா மருமமேதையா

                        அனுபல்லவி
ஊரினில் உள்ளோர் உற்றது சொல்லா - உனை
நேரினில் கண்டோர் யாருமே சொல்லா

                           சரணம்
நீரினில் நிலத்தினில் நீள்வெளி யதனினில்
காரினில் கடலினில் காணிடும் பொருளினில்
பாரினில் பழந்தமிழ் பாவினில் பயின்றிடு
சீரினில் செறிந்து சோதியாய் நின்றிடு
இனிதே,
தமிழரசி  

சொல்விளக்கம்: 
மருமம் - விடை அறியமுடியாத ஒன்று
உற்றது - உண்மை/ விடை
கார் - கரிய மேகம்
பார் - உலகம்
பா - பாடல்
பயின்றிடு - கற்கும்/ படிக்கும்
சீர் - செய்யுள் இலக்கணத்தின் படி அசைச் சொற்கள் தனித்தோ இணைந்தோ சீராக[ஒழுங்காக] வருவதால் அவை சீர் எனப்படும்.
செறிந்து - நெருக்கமாய் நிறைந்து
நின்றிடு - நிற்கும்

No comments:

Post a Comment