Friday 12 April 2013

ஆசைக்கவிதைகள் - 60


தெரிந்தெடுத்த தேவதை!

ஈழத்தமிழரின் பெருமை சொல்லும் பண்டைய ஊர்களில் அராலியும் ஒன்று. அராலி, காரைநகர் போன்ற ஊர்க்காரர் தமது சொந்தத்துக்குள்ளே திருமணம் செய்யும் வழக்கம் உடையவர்கள். இருப்பினும் அராலியில் வாழ்ந்த ஓர் இளைஞன் தனது மச்சாளை மணம்முடிக்காது, சீர்தனத்துக்காக (பணத்துக்காக) வெளியூர்ப் பெண் ஒருத்தியை திருமணம் செய்தான். அவன் திருமணம் செய்து அழைத்து வந்த பெண்ணின் அழகை, அவனது மச்சாள் இந்த நாட்டுப்பாடல்களில் வர்ணிக்கிறாள். இப்பாடல்கள் மச்சாளின் ஆற்றாமையையும் வெறுப்பையும் மிக அழகாகக் காட்டுகின்றன. அராலி இளைஞன் தெரிந்தெடுத்த தேவதையின் அழகை நீங்களும் கொஞ்சம் பார்த்து மகிழுங்கள்.

மச்சாள்: ‘ஊரெல்லாம் தேடி மச்சான்
                        பார்த்தெடுத்த செங்குரங்கு
               வாரா கைவளை வீசீ
                       வாயிலோ நாலு பல்லு

மச்சாள்: காக்கா கருப்பு நிறம்
                        ஒரு காலுமல்லோ முடம்
               கண்ணு ரெண்டுஉ கோழிமுட்ட
                        காதுமோ ஆனைக் காது

மச்சாள்: சீரெல்லாம் வேண்டி மச்சான்
                         தெரிந்தெடுத்த தேவதை
               சிரிச்சா சிறுகுரங்கு இளிச்
                         சாட்டம் இருக்கே’
                                      - நாட்டுப்பாடல் (அராலி)
                                                  (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

No comments:

Post a Comment