Monday, 1 April 2013

ஆசைக்கவிதைகள் - 59

கரும்பிருக்கு தின்றிடுங்கோ!


















பெண்: காத்தோடும் திண்ணையிலே
                       கலகலத்த கம்பம்பாயில்
            நீலத் தலையணையில் 
                       நித்திரையைக் கொண்டிடுங்கோ

பெண்: இன்னந்தான் நித்திரையோ
                       இளராசா மந்திரியோ
             கண்ணைத் திறந்திடுங்கோ
                        கரும்பிருக்கு தின்றிடுங்கோ
                                              - நாட்டுப்பாடல் (வன்னேரிக்குளம்)
                                                                         (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

குறிப்பு: 
வன்னேரிக்குளம், ஆண்டான்குளம் போன்ற இடங்களில் காலங்காலமாக வாழும் வன்னிமக்கள் மரியாதையை வெளிப்படுத்துவதற்காக மற்றவர்களை ‘வாங்கோ’ ‘இருங்கோ’ என ‘ங்கோ’ போட்டு அழைப்பதை இன்றும் காணலாம். பண்டைய ஈழத்தமிழ் வன்னிமக்களின் மரியாதைப் பண்பை இந்த வன்னேரிக்குள நாட்டுப்பாடல் எடுத்துச் சொல்கிறது.

No comments:

Post a Comment