Monday, 6 January 2014

கலந்தாய் வாழி!


விரைமலர் ஏந்தி வந்து பணியாமுன்னம்
          விதிமுறை கற்று வந்து பணியாமுன்னம்
உரைபொருள் வாது செய்து ஒழியாமுன்னம்
          உறுகெழு பாவம் செய்து ஒழியாமுன்னம்
நரைதிரை மூப்பு வந்து நலியாமுன்னம்
          நமர்தமர் தூதர் வந்து நலியாமுன்னம்
கரைபொருது ஓடி வந்து கலக்கும்நீராய்
          கணநொடி தன்னுள் வந்து கலந்தாய்வாழி!
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
விரைமலர் - நறுமணம் வீசும் மலர்
பணியாமுன்னம் - வணங்க முன்னர்
விதிமுறை - வணங்குவதற்கான முறையை
உரைபொருள் வாது - சொற்களின் கருத்தை வாதிட்டறிதல்
ஒழியாமுன்னம் - ஓயமுன்னர்
உறுகெழு - கேட்போர் அஞ்சும்படி
நமர்தமர் தூதர் - யமதூதர்
நலியா முன்னம் - வருத்த முன்னர்
கரைபொருது - கரையில் மோதி
கலக்கும் நீர் - ஆற்றுநீர் கடலில் கலப்பது போல்
கணநொடி - நொடிப்பொழுதில்

No comments:

Post a Comment