Friday 2 March 2012

அடிசில் 16

அன்னாசிப்பழ பாயாசம்

                                                   - நீரா -
தேவையான பொருட்கள்:
தோல்நீக்கிய சிறிய அன்னாசிப்பழம்  - 1 
சவ்வரிசி  - 1½ மே.கரண்டி
சீனி/சர்க்கரை  -  ½ கப்
டின் பால்  -  ½ கப்
தேங்காய்ப்பால்  -  ½ கப்
தண்ணீர்  -  2 கப் 
ஒடித்த முந்திரிப்பருப்பு  - 10
நெய்  -  ½ மே.கரண்டி 
சிறிது ஏலப்பொடி  
சிறிது உப்பு
செய்முறை:
1.  ஒருபாத்திரத்தில் நெய்யைவிட்டு முந்திரிப்பருப்பைப் பொரித்தெடுத்து வைக்கவும்.
2.  அதில் சவ்வரிசியைப் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
3.   வறுத்த சவ்வரிசியையும் அன்னாசிப் பழத்தையும் மிக்சியில் அரைத்தெடுக்கவும்.
4.  ஒருபாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து அதற்குள் அரைத்த கலவையைவிட்டு கலக்கி சவ்வரசி வேகும்வரை காச்சவும்.
5.  அதற்குள் மிகுதிப்பொருட்களைச் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்
குறிப்பு
அன்னாசிப்பழத்தில் புளிப்புத் தன்மை இருப்பதால் பசுப்பால் சேர்த்தால் பாயாசம் திரைந்து வரும். அத்துடன் புளிப்புச் சுவையும் கூடும்.

No comments:

Post a Comment