Monday 9 July 2012

அடிசில் 29


எள்ளுச் சுசீயம் 
                              - நீரா -
தேவையான பொருட்கள்:
எள்ளு - 1 கப்
சீனி/சர்க்கரை -  1  கப் 
தேங்காய்த்துருவல்  - 1 கப்
வறுத்த உழுத்தம்மா  1 மேசைக் கரண்டி
எண்ணெய்  - பொரிப்பதற்கு

சுசீயத்தின் மேல்மாவிற்கு:
அரிசிமா  - 114 கப்
கோதுமை மா  - ½ கப்
தேங்காய்ப் பால்  - 1 கப்
ஏலக்காய் தூள்  -  1 சிட்டிகை
உப்பு  - தேவையான அளவு 
செய்முறை:
  1. எள்ளையும் தேங்காய்த் துருவலையும் தனித்தனியே மணம் வரும் வரை வறுத்தெடுக்கவும்.
  2. ஆறியபின்னர் அவற்றுடன் உளுத்தம் மாவும், சர்க்கரையும் சேர்த்து கிரைண்டரில் அரைத்து எடுக்கவும்.
  3.   அரைத்தெடுத்த கலவையை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்க.
  4.   தேங்காய்ப்பாலில் அரிசிமா, கோதுமைமா, ஏலத்தூள்,  உப்பும் போட்டுக் கரைத்து கொள்க.
  5.   கரைத்த மாவினுள் பிடித்திருக்கும் எள்ளுருண்டைகளைத் தோய்த்து சூடான எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.

No comments:

Post a Comment