Tuesday 31 January 2012

குறை ஒன்றும் அறியேன்



                                பல்லவி
உனைத் தேடுவதல்லால் வேறுகுறை 
ஒன்றும் அறியேன் இக்குவலயத்தில்
                                                   - உனைத் தேடுவதல்லால்

                           அனுபல்லவி
பிறைசூடும் பெம்மான் பெருந்தேவியே!
மறைஓதும் மாமுனிவரும் போற்றும்
                                                   - உனைத் தேடுவதல்லால்

                                சரணம்
அரைஞாணும் புரிநூலும் துலங்க
பறைபோலும் வயிற்றோடு பாலகனாய்
முறையாக வலம் வந்து பழம் பெற்ற
கறையானை பணிந்தேத்தும் அம்மையே!
                                                   - உனைத் தேடுவதல்லால்

அசைந்தாடும் மயிலேறி அகிலம் வலம்வந்து
கசந்த மனத்தனாய் கயிலைவிட்டேகி
அசலந்தனில் ஆண்டியாய் நின்ற வேலனை
இசைவுடன் பழம் நீ என்றழைத்த அன்னையே!
                                                    - உனைத் தேடுவதல்லால்
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment