Monday 16 January 2012

அடிசில் .10

மாம்பழ இனிப்பு
                                - நீரா -

தேவையானவை:
அரைத்த மாம்பழம்  -  2 கப்
சீனி  -  1கப்
பால்மா  -  1½ கப்
பால்  -  1 மேசைக் கரண்டி
நெய்  -  2 தேக்கரண்டி
வறுத்த முந்திரிப் பருப்பு  - 1 மேசைக் கரண்டி
ஏலக்காய் தூள்  - ½ தேக் கரண்டி
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை:
1.  பாலையும் நெய்யையும் சிறிது சூடாக்கவும்.
2.  ஆறவிட்டு பால்மாவுடன் நன்கு கலந்து அரித்தெடுக்கவும். ஈரத்தன்மையுள்ள மாவாக இருக்கும்.
3.  அடிப்பாகம் தடிப்பான பாத்திரத்தில் அரைத்த மாம்பழத்தை இட்டு, சூடாக்கி கொதிக்கும் போது சீனியையும் சேர்த்து இளம் சூட்டில் நன்கு தடித்து வரும் வரை கிளறவும்.
4.  அதனுள் அரித்து வைத்துள்ள பால்மா, ஏலத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து பாத்திரத்தில் ஒட்டாது திரண்டு வரும் போது இறக்கவும்.
5.  எண்ணெய் பூசிய பாத்திரத்தில் கொட்டிப் பரவி, துண்டுகளாக் வெட்டி அவற்றின் நடுவே முந்திரிப் பருப்பை அழுத்தி வைக்கவும்.
6.  ஆறியதும் எடுத்துப் பறிமாறவும்.

குறிப்பு:
அரைத்த மாம்பழத்திற்குப் பதிலாக, 3கப் மாம்பழக் கூழ் (pulp) பாவிக்கலாம்.

No comments:

Post a Comment