Wednesday 4 January 2012

அடிசில் .9

நிலக்கடலைப்பாகு

                                            - நீரா -


தேவையானவை:
நிலக்கடலை பட்டர் (peanut butter) - 100 கிராம்
சீனி (brown suger)  -  225 கிராம்
பட்டர்  -  50 கிராம் 
பால்  -  75 மில்லி கிராம்
சீனி (icing sugar)  -  100 கிராம்
வனிலா  -  1 தேக்கரண்டி
செய்முறை:
1.  குளிரூட்டக்கூடிய பாத்திரத்தில் சிறிது பட்டர் தடவி வைக்கவும்.
2.  அடிப்பகுதி தடிப்பான பாத்திரத்தில் பாலையும் பிரொவுன் சீனியையும் (brown suger) இட்டு கிளறி நன்கு கொதித்து நுரைவரும்வரை சூடாக்கவும்.
3.  அடுப்பில் இருந்து இறக்கி கொதிக்கும் பால்ப்பாகினுள் பட்டரையும் நிலக்கடலை பட்டரையும் போட்டு நன்றாகக் கலக்கவும்.
4.  அதற்குள் வனிலாவை சேர்த்துக் கலந்து மீண்டும் அடுப்பில் வைத்து குமிழிகள் வரும்வரை கிளறி இறக்கவும்.
5.  வாயகன்ற பாத்திரமொன்றில் அரித்த ஐசிங் சீனியை பரவிப்போடவும்.
6.  அச்சீனியுள் பாகுக்கலவையை இட்டு மிகவிரைவாக கட்டி இல்லாது கலக்கவும்.
7.  பட்டர் தடவிய பாத்திரத்தில் அக்கலவையை விட்டு பரப்பி 2 மணி நேரம் குளிரூட்டி விரும்பிய வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
குறிப்பு:
மரக்கரண்டி பாவித்தால் கடலைப்பாகு கட்டி இல்லாது நன்றாக வரும்.

No comments:

Post a Comment