Friday 25 January 2013

திருவருள் செய் கந்தவேளே!

கிளிநொச்சி கந்தவேள் வணக்கப் பாமலர்
                                   
























அன்புருகு செந்தமிழில் அருணகிரி நாதருக்கு
          அடியெடுத்துக் கொடுத்தும்
ஆராய்ந்த களவியலில் நம்பிமகள் ஈடேற
           அருங்கா மகிழ்ந்தணைந்தும்
என்புருக நோற்ற நக்கீரன் சிறைமீள
           ஏந்துவேல் ஏவிநின்றும்
ஏழுலகும் அடிதொழப் பேரருள் புரிந்துசீ
           ரலைவாய் மகிழ்ந்திருந்தும்
இன்புதவு குஞ்சரியை இந்திரனிடந் திருப்
           பரங்குன்றி லேற்றருளியும்
ஏகுநீர் ஓங்கார இசைமருவு இரணைமடு
          எழில் வளர்க்குங்கழனியிற்
செந்நெல்விளை கிளிநொச்சி சேர்கந்த கோட்டம்
          திருமருவ வீற்றிறிருக்குஞ்
செவ்வேழெனும் பெயர்கொள் செல்வனே!
           திருவருள்செய் கந்தவேளே!
                                                                    - இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன்[எனது தந்தை]
                                                    [அறுபது வருடங்களுக்கு முன்னர் எழுதியது]
இனிதே, 
தமிழரசி.

2 comments:

  1. நல்ல பாடல். //செவ்வேழெனும் // -- செவ்வேள் அல்லவா?

    ReplyDelete
    Replies
    1. இப்பாடலை இயற்றியவர் எனது தந்தை. வேள் - வேழ் பாடபேதங்கள் உண்டு. வடநாட்டுத் திருப்பதியை சிங்கவேழ் குன்றம் என்றும் சிங்கவேள் குன்றம் என்றும் சொல்வர்.

      Delete