Saturday 12 January 2013

அடிசில் 41

பச்சைமிளகாய் அச்சாறு

                                                          - நீரா -


























தேவையான பொருட்கள்:
பச்சைமிளகாய்  -  300 கிராம்
கரட்/பீன்ஸ்  -  100 கிராம்
சின்னவெங்காயம்  -  5/6
வெந்தயம்  -  ½ மேசைக்கரண்டி
பெருஞ்சீரகம்  -  1 தேக்கரண்டி
கொத்தமல்லி  -  ½ மேசைக்கரண்டி
மஞ்சள்  - ½ தேக்கரண்டி
மாங்காய்த்தூள்  - 1 தேக்கரண்டி 
வினாக்கிரி (Vinegar)  - 1½ மேசைக்கரண்டி 
உப்பு  - தேவையான அளவு
எண்ணெய்  - 1 மேசைக்கரண்டி

செய்முறை:
1.   மிளகாயைக் கழுவி காயவைத்து, ஒருபக்கம் மட்டும் நீளாக பிளந்து கொள்ளவும்.
2.  எண்ணெயைத் தவிர்த்து மற்றைய பொருட்களை வினாக்கிரியுடன் சேர்த்து நறுவல் துருவலாக அரைத்துக் கொள்க.
3.  வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடாக்கி, அரைத்த கூட்டை அதில் சேர்த்து  கலந்து மெல்லிய சூட்டில் 2 நிமிடம் வேகவிட்டு இறக்கவும்.
4. ஆறியதும் பிளந்த ஒவ்வொரு மிளகாய்க்குள்ளும் இக்கலவையை வைத்து அடைக்கவும்.
5.  அடைத்த மிளகாய்களை ஈரமற்ற கண்ணாடி ஜாடியில் இட்டு, பாத்திரத்தின் அடியில் தங்கி நிற்கும் வினாகிரி கலவையை அதனுள்விட்டு இறுக்கமாக மூடி வைக்கவும்.
6.  இடையிடையே குலுக்கி வைத்து 2 நாளின் பின் பாவிக்கவும். 

குறிப்பு:
கரட்/பீன்ஸ்க்கு பதிலாக இலேசாகப் பொரித்த இறால்/ மீன் சேர்க்கலாம்.

No comments:

Post a Comment