Saturday, 16 February 2013

கொட்டமிட்டேன் நானே!



சொட்டு சொட்டு என்று
விட்டு விட்டு தூறி
கொட்டும் மழை தன்னை
கண்டு மனம் துள்ள
கிட்ட யாரும் உண்டா
வட்டமிட்டுப் பார்த்து 
எட்டி மெல்ல பாய்ந்து
துள்ளித் துள்ளி வீழும்
பொன் மணி நீரை 
பட்டுக் கரம் தன்னால்
அட்டி மெல்லச் சேர்த்து
முட்ட முட்ட குடித்து
தட்டி விளையாடி
சட்டு சட என்று 
கால் தாளமும் போட
கொட்டமிட்டேன் நானே!
இனிதே,
தமிழரசி.

குறிப்பு:
நான் சிறுமியாக இருந்த காலத்தில் பாட்டென நினைத்து எழுதிய பாடல்.

No comments:

Post a Comment