Friday 15 February 2013

பாரறியக் கூறுவரோ?

பாலியாற்று மணல் விலை


சில நூற்றாண்டுகளுக்கு முன் வவுனிக்குள பாலியாற்றங்கரை ஓரமணலில் கன்னியொருத்தி கால் தடம் பதித்து விளையாடினாள். அவளின் விளையாட்டைப் பார்த்து மகிழ்ந்த ஒரு இளைஞன் அவளுடன் பேசுவதற்காக அவளது கால் தடத்தின் விலை என்ன என்று கேட்கின்றான். 

அவள் சாதாரண  கன்னியரைப் போல தன் கால்த்தடத்துக்கு விலை கூறவில்லை. என்ன கேள்வி! பாலி ஆற்று மணலில் பதித்த கால் தடத்தின் விலையைச் சொன்னால் நிலைகுலைந்து போய்வாய். ஏனென்றால் எங்க பாலியாற்று மணல் விலையை எவராவது உலகம் அறியச் சொல்வாரா? எனக் கேட்பதால் ‘பாலி ஆற்றுமணல் விலைக்கு விற்காவா இருக்கிறது?’ என்பதையும், அக் கன்னியின்   நாட்டுப் பற்றையும்  அவளின் பதில் காட்டுகிறது.

ஆண்: ஆற்றோர மணல் மீது
                      அழகழகாய் கால் பதிக்கு(ம்)
            வெள்ளையம்மா! உன்
                      கால்தடந்தான் என்னவெல?
       
பெண்: கால் தடத்தின் வெலகூறின்
                      கலகலத்துப் போயிடுவீர்!
            பாலியாற்று மணல் வெல
                       பாரறியக் கூறுவரோ?
                                                   - நாட்டுப்பாடல் (பாலியாறு)
                                        - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment