கற்றாழைப்பூத் துவையல்
- நீரா -
தேவையான பொருட்கள்:
மகரந்தம் நீக்கிய கற்றாழைப்பூ இதழ்கள் - ½ கப்
தேங்காய்ப்பூ - 1 கப்
செத்தல் மிளகாய் - 5
தோல் நீக்கிய சின்ன வெங்காயம் - 5
எண்ணெய் - 2 தேக்கரண்டி
எலுமிச்சம் சாறு - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் கற்றாழை இதழ்களை இட்டு இளம் சூட்டில் பூவின் நிறம் மாறாது வதக்கிக் கொள்க.
2. வதக்கிய இதழ்களுடன் தேங்காய்ப்பூ, செத்தல் மிளகாய், சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்க.
3. அரைத்த துவையலுக்கு எலுமிச்சம் சாறு விட்டு பிசைந்து எடுக்கவும்.
No comments:
Post a Comment