Wednesday 3 May 2017

கோயிலில் இருப்பது யாரறிவார்!


ஆணோ பெண்ணோ அலியோ தானறியார்
          காணாக் கடவுள் கருணையினை
ஊணோ உயிரோ உடலோ பேரறியார்
          ஏனோ மனத்துனைத் தேடுகிறார்
காணாக் காட்சி காணப் பேதிலியார்
          காலை மாலை போற்றுகிறார்
கோண் ஆர்பிறை அணி அம்மாளே
         கோயிலில் இருப்பது யாரறிவார்
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
காணாக்கடவுள் - காண்பதற்கு அரிய கடவுள்
ஊண் - உணவு
காணாக் காட்சி - பார்க்காத காட்சி
காண - பார்க்க
பேதிலியார் - மனக்கலக்கம் உடையோர்
போற்றுகிறார் - வணங்குகிறார்
கோண் ஆர்பிறை - வளைந்த அழகிய பிறை

2 comments:

  1. ஆர்பிறை அர்த்தம் என்ன?

    ReplyDelete
    Replies
    1. ஆர்-அழகு, ஆர்பிறை-அழகியபிறை, கோண் ஆர்பிறை - வளைந்த அழகியபிறை. சீர் ஆர் பொழில் சூழ் - சிறந்த அழகிய காடு சூழ்ந்த[திவ்வியப்பைரபந்தம்.

      Delete