அவித்த முட்டைப்பொரியல்
- நீரா -
தேவையான பொருட்கள்:
முட்டை - 6
மிளகு தூள் - ¼ தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ½ தேக்கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு - ½ தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முட்டை மூழ்கும் அளவுக்குத் தண்ணீர்விட்டு உப்பும் சேர்த்து, நன்கு வேகவைக்கவும்.
- வெந்ததும் தண்ணீரை வடித்து குளிர்ந்த நீரில் மூட்டையைப் போட்டுவைக்கவும்.
- முட்டை ஆறியதும் அதன் கோதை உரித்து முட்டையை எடுக்கவும்.
- அவித்தமுட்டையை முள்ளுக்கரண்டியால் சுற்றவரக் குத்திக்கொள்க.
- ஒரு கண்ணாடிப்பாத்திரத்தில் மிளகுதூள், மிளகாய்த்தூள், எலுமிச்சம் பழச்சாறு, உப்பும் சேர்த்து இரண்டு தேக்கரண்டி தண்ணீர் விட்டு கலந்து கொள்க.
- அக்கலவையுள் முட்டையைப் போட்டு புரட்டி 15 நிமிடம் ஊறவிடவும்.
- வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய்விட்டுச் சூடானதும் முட்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
No comments:
Post a Comment