பேரீச்சம்பழக் கேக்
- நீரா -
தேவையான பொருட்கள்:
விதையற்ற பேரீச்சம் பழம் - 500 கிராம்
தேயிலைச் சாயம் - 1 கப்
பட்டர் - 250 கிராம்
சீனி - 250 கிராம்
ரவை - 250 கிராம்
முட்டை - 4
திராட்சை வற்றல் (currants) - 50 கிராம்
வெட்டிய முந்திரிப் பருப்பு - 50 கிராம்
அப்பச்சோடா - 2 தேக்கரண்டி
வனிலா - 1½ தேக்கரண்டி
செய்முறை:
1. பேரீச்சம் பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி தேயிலைச் சாசத்தில் 6 - 7 மணி நேரம் ஊறவிடவும்.
2. பட்டரையும் சீனியையும் சேர்த்து அடிக்கவும்.
3. அவற்றுடன் ஒவ்வொரு முட்டையாகச் சேர்த்து அடிக்கவும்.
4. ரவையுடன் அப்பச்சோடாவைக் கலந்து அரித்துக்கொள்க.
5. அரித்த ரவையை சிறிது சிறிதாக முட்டைகலவையுடன் சேர்த்து கலந்து கொள்க.
6. அக்கலவையுள் முந்திரிப்பருப்பு, திராட்சை வற்றல், வனிலா மூன்றையும் சேர்த்து மெதுவாக கலந்து கேக்டின் உள் இட்டு மட்டப்படுத்தவும்.
7. அதனை 180°C யில் சூடேறிய அவணில் 50 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
No comments:
Post a Comment