கண்ணீரில் நனைகின்ற என் தேயமே
கருத்தெல்லாம் நீ நிறைந்தாய் அந்நாளிலே
மண்ணீரின் வனப்பெல்லம் நீ தாங்கினாய்
மனமென்னும் மேடையில் நிதம் ஆடினாய்
விண்ணீரின் துளிவீழா நில மானதே
வனமெங்கும் நீரற்றுப் பா ழானதே
உண்ணீரும் கிடையாது உடல் சாயுதே
உணவுக்கும் வழியின்றி உயிர் போகுதே
கண்ணீரே புண்ணீராய் குளம் காணுமோ
கனவிலும் உன்மேனி வளம் காணுமோ
மண்ணீரின் வனப்பெங்கும் நாம் காண்பமோ
மகிழ்ந்துயிர்கள் வாழும் வகை காண்பமோ
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment