Friday, 6 March 2015

என்ன புண்ணியம் ஈதறியேனே!

சிந்தை சிவக்கச் சிரிக்கின்றான்
     சிவனவன் என் சிந்தையுள் நின்று
முந்தை வினைகள் எரிக்கின்றான்
     முற்றா மனத்துள் முளைத்திருந்து
பிந்தை வினைகள் பொறுக்கின்றான்
     பேதை நெஞ்சத்துள் புகுந்திருந்து
எந்தை ஈசன் அருள்கின்றான்
     என்ன புண்ணியம் ஈதறியேனே!

1 comment:

  1. மேலேயுள்ள பாடல் மா மா காய் அரையடிக்கு வாய்பாடுள்ள அறுசீர் விருத்தமாகும்; ஆனால் நெஞ்சத்துள் - காய்ச்சீர் - மா (நெஞ்சுள்) வரவேண்டும். புண்ணியம் - விளச்சீர் - மாச்சீர் (புண்யம்) வரவேண்டும், ஈதறியேனே - நான்கசைச்சீர் - அறியேனே என்ற மாற்றங்கள் செய்யலாம்.

    பிந்தை வினைகள் பொறுக்கின்றான்
    பேதை நெஞ்சுள் புகுந்திருந்து
    எந்தை ஈசன் அருள்கின்றான்
    என்ன புண்யம் அறியேனே.

    ReplyDelete