Monday, 16 March 2015

அடிசில் 89

கீரைப் பிட்டு
- நீரா -      

தேவையான பொருட்கள்: 
வெட்டிய கீரை  -  2 கப்
அரிசி மா  -  1 கப்
தேங்காய்த் துருவல்  -  ½ கப்
சிறிய வெங்காயம்  -  1
செத்தல் மிளகாய்ப் பொடி  -  1½ தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு

செய்முறை: 
1. வெந்தயக்கீரை, முளைக்கீரை, முருங்கக்கீரை போன்ற எந்தக் கீரை என்றாலும் அதனை சுத்தம் செய்து கழுவி மிகச்சிறியதாக வெட்டி, எண்ணெய் விட்டு சிறிது உப்பும் போட்டு கலந்து கொள்க.
2. தேங்காய்த் துருவல், வெங்காயம், மிகாய்ப்பொடி, உப்பு நான்கையும் சேர்த்து சம்பல் போல் இடித்துக் கொள்க.
3. கலந்து வைத்துள்ள கீரையோடு இடித்த சம்பலுடன் ஒரு கைப்பிடி மாவும் சேர்த்து பிசிறிக் கொள்க.
4. மிகுதியாக இருக்கும் மாவை மாப்பதமான பிட்டாகக் குழைக்கும் போது பிசிறிய கீரையையும் சேர்த்து பிட்டாக குழைத்து ஆவியில் அவித்து எடுக்கவும்

குறிப்பு:
கீரையில் நீர்த்தன்மை இருப்பதால் சிறிது மா கூடுதலாக சேர்க்க வேண்டி வரலாம். அதன் அளவு கீரைக்குக் கீரை மாறுபடும். 

No comments:

Post a Comment