Friday, 20 March 2015

சீரெல்லாம் அள்ளித் தருவாயே!


கந்தா கடம்பா கதிர்வேலா
    கண்ணுதலான் பெற்ற கருநிதியே
முந்தா வினைகள் அறுப்பாயோ
    மூவுலகும்தொழ நின்ற பெருநிதியே
எந்தா எனக்கு இரங்காயோ
    எண்ணுகிலேன் என்று கருதாதே
சிந்தா குலம் தீர்ப்பாயே
    சீரெல்லாம் அள்ளித் தருவாயே!
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
கடம்பா - கடம்பமலர் மாலை அணிந்த முருகன்
கதிர்வேலா - ஒளிக்கதிர் போல் மின்னும் வேலை உடையவன்
கண்ணுதலான் - சிவன்/நெற்றிக்கண் உள்ளவர்
கருநிதி - அழிக்க முடியாத செல்வம்
முந்தா வினைகள் - தேங்கி இருக்கும் வினைகள்
எந்தா - எந்தாய்/எந்தந்தை
எண்ணுகிலேன் - நினைக்கவில்லை
கருதாதே - எண்ணாதே
சிந்தாகுலம் - மனக்கவலை
சீர் - செல்வங்கள்/ சிறப்புகள்

No comments:

Post a Comment