மாம்பழப் பானம் (Mango juice)
- நீரா -
தேவையான பொருட்கள்:
மாம்பழம் - 2
இளநீர் - 2 கப்
தேன் - 1 மேசைக்கரண்டி
எழுமிச்சம் சாறு - 1 தேக்கரண்டி
ஏலத்தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
1. மாம்பழத்தின் தோலைச் சீவி கொட்டையை நீக்கி துண்டுகாளாக வெட்ட, எலுமிச்சம் சாறு விட்டு கலந்து கொள்க.
2. இளநீர், தேன், வெட்டிய மாம்பழத்துண்டுகள் மூன்றையும் லிக்குடைசருள் (liquidiser) இட்டு நன்கு அடிக்கவும்.
3. அடித்தெடுத்த மாம்பழப் பானத்தை கிளாசில் விட்டு ஏலத்தூள் தூவிப் பரிமாறவும்.
குறிப்பு:
பண்டைய தமிழர் குடித்த மாம்பழப் பானம் இது. கோடையின் வெப்பத்தால் வரும் நோய்களைத் தடுக்கும் மருந்தாக இதனைக் குடித்து நோயற்று வாழ்ந்தனர்.
1. இளநீர் வழுக்கை இருந்தால் அதனைச் சிறுதுண்டுகளாக வெட்டிப் போட்டு குடிக்க சுவையாக இருக்கும்.
2. எலுமிச்சம் சாறு இல்லாமல், தேன் சேர்க்காது சீனி சேர்த்தும் செய்யலாம்.
No comments:
Post a Comment